கிரிக்கெட்

தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனை பாராட்டி ஆஸ்திரேலியாவில் பிளக்ஸ் அடித்த அஜித் ரசிகர்கள்!

Published

on

சிட்னியில் இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான டி20 தொடரின் 3வது போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அங்கு 3 ஒரு நாள் போட்டி தொடர், 3 டி20 போட்டி தொடர் மற்றும் 4 டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இந்தியாவின் இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் வெளியிடப்பட்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2-1 என்று ஆஸ்திரேலியா வென்றது.

இன்று டி20 கிரிக்கெட்தொடரின் 3வது போட்டி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 2 டி20 போட்டிகளில் விளையாடிய இந்தியா, தொடரை வென்றுள்ளது.

இவற்றில் தொடர்ந்து 4 போட்டிகளிள் திறமையாகப் பந்துவீசி விக்கெட்களை குவித்து வருகிறார் தமிழகத்தின் சேலம் பகுதியைச் சேர்ந்த நடராஜன். சேலத்தில் அஜித் ரசிகர்கள் அதிகம்.

இந்நிலையில் இந்த போட்டியைக் காணச் சென்ற அஜித் ரசிகர்கள், அஜித் மற்றும் நடராஜன் இணைந்துள்ளது போல பிளக்ஸ் ஒன்றை அடித்து மைதானத்தில் வலம்வந்துள்ளனர்.

இந்த பிளக்ஸில் இந்திய அணியில் இடம்பெற்று விக்கெட்களை குவித்து சாதனை செய்துவரும் நடராஜனுக்கு அஜித் ரசிகர்கள் சார்பில் வாழ்த்துகள் என்று பிளக்ஸில் குறிப்பிட்டுள்ளனர். கிரிக்கெட் போட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான போது இந்த பிளக்ஸூம் காண்பிக்கப்பட்டு அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இன்றைய போட்டியின் போது டாஸ் வென்ற இந்திய அணி ஆஸ்திரேலியாவை பேட்டிங் செய்ய அழைத்தது. 20 ஓவர்கள் முடிவில் 5 வெக்கெட்களை இழந்து 186 ரன்களை ஆஸ்திரேலியா அடித்துள்ளது. 187 ரன்கள் அடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version