சினிமா செய்திகள்

தல அஜித்தின் ‘மங்காத்தா’வின் 10வது வருடம்: ரசிகர்கள் கொண்டாட்டம்!

Published

on

தல அஜித் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான திரைப்படம் ’மங்காத்தா’ என்பதும் இந்த படம் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் சொல்லப்போனால் அஜித்தின் படங்களிலேயே மங்காத்தா போன்ற வெற்றி இன்னும் வேறு படம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 10 வருடத்திற்கு முன்பே 50 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் அப்போதே 150 கோடி வசூல் செய்து சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்துக்கு இணையாக ஆக்சன் கிங் அர்ஜுன் இந்த படத்தில் நடித்து இருந்தார் என்பதும் த்ரிஷா, லட்சுமிராய், அஞ்சலி, ஆண்ட்ரியா ஆகிய நான்கு நாயகிகள் மற்றும் அஸ்வின், பிரேம்ஜி உள்பட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் வெற்றிக்கு மிகப் பெரிய காரணமாக யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படம் ரிலீசாகி மிகச் சரியாக பத்து வருடங்கள் முடிவடைகிறது. கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியான இந்தப் படம் நாளையுடன் 10 வருடத்தை நிறைவு செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அஜீத் ரசிகர்கள் இணையதளங்களில் காமன் டிபி புகைப்படத்தை வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

மேலும் மங்காத்தா குறித்த ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ’மங்காத்தா 2’ படத்தை விரைவில் உருவாக்க வேண்டும் என்று ரசிகர்கள் கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில் கண்டிப்பாக ’மங்காத்தா 2’ படத்தை உருவாக்குவேன் என்று வெங்கட் பிரபு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version