சினிமா செய்திகள்

புளூசட்டை மாறனை அஜித் ரசிகர்கள் தாக்கினார்களா? வைரல் புகைப்படம்!

Published

on

திரைப்பட விமர்சகர் புளூசட்டை மாறனை அஜித் ரசிகர்கள் திரையரங்கு ஒன்றில் தாக்கியதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

பிரபல சினிமா விமர்சகர் புளூசட்டை மாறன் எந்த பெரிய நடிகர் என்றும் பாராமல் பல திரைப்படங்களை தனது விமர்சனத்தில் கிழித்து துவைத்தெடுப்பார் என்பது தெரிந்ததே.

குறிப்பாக வலிமை திரைப்படத்தை அவர் விமர்சனம் செய்த பாணி அனைவரையும் முகம் சுளிக்க செய்தது. ஒரு திரைப்படத்தின் நல்லது கெட்டதை விமர்சிக்காமல் அஜித்தை தனிப்பட்ட முறையில் விமர்சித்தது நடுநிலை ரசிகர்களுக்கு எரிச்சலை தந்தது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் சமீபத்தில் சென்னையில் உள்ள திரையரங்கில் படம் பார்க்க புளூசட்டை மாறன் சென்றபோது அவரை அஜித் ரசிகர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகைப்படத்தை புளூசட்டை மாறன் தனது டுவிட்டரில் பதிவு செய்து கூறியிருப்பதாவது:

தியேட்டர்னா நாலு பேர் பாக்க வருவாங்க. முடிஞ்சதும் வெளிய போவாங்க. அதை மறைஞ்சி நின்னு ஏன்டா போட்டோ எடுத்த? நேர்ல வந்து எடுத்து தொலைய வேண்டியதுதான? இதை ஷேர் பண்ணுற அளவுக்கு நான் செலப்ரிட்டி இல்ல. எப்படியோ…வைரல் பப்ளிசிட்டி தந்த அந்த தம்பிக்கு ரொம்ப நன்றி

seithichurul

Trending

Exit mobile version