சினிமா செய்திகள்

சாமி வந்தவரிடம் ‘வலிமை’ அப்டேட்: அஜித் ரசிகரின் அட்ராசிட்டி

Published

on

சாமி வந்த ஒருவரிடம் அஜித் ரசிகர்கள் ‘வலிமை’ அப்டேட் கேட்ட அட்ராசிட்டி வீடியோ ஒன்று ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அஜித் ரசிகர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக ‘வலிமை’ படக்குழுவினர்களிடம் அப்டேட் கேட்டு அலுத்துவிட்டனர். மே ஒன்றாம் தேதி ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் என அறிவிப்பு வெளியாகி அதன் பின்னர் ரத்து செய்யப்பட்டது. இதனால் அஜீத் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் தொடர்ச்சியாக ‘வலிமை’ அப்டேட்டை அஜித் ரசிகர்கள் கேட்டு வந்தாலும், படக்குழுவினர் இப்போதைக்கு வலிமை அப்டேட் விடுவார்களா என்பது சந்தேகமே என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் டுவிட்டரில் வீடியோ ஒன்று திடீர் என வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சாமி வந்த ஒருவர் பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறி கொண்டிருக்கும் நிலையில் அஜித் ரசிகர்கள் சிலர் அவரிடம் சென்று ‘வலிமை’ அப்டேட் கூறுங்கள் என்கிறார்கள். அந்த சாமி திருதிருவென முழிக்க எங்களுக்கு வலிமை அடையத்தான் வேண்டும் என்று ரசிகர்கள் திரும்பவும் கேட்க, அதன்பின் அவரும் ‘வலிமை’ அப்டேட் உறுதியாக வரும் என்று கூறுகிறார். இதனை அடுத்து அவரிடம் அஜித் ரசிகர்கள் அனைவரும் விபூதி வாங்கி பூசிக்கொள்கின்றனர் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் அஜித் ரசிகர்கள் ‘வலிமை’ அப்டேட்டை கேட்காத நபரே இல்லை என்று கூறலாம். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முதல் பலரிடம் ‘வலிமை’ அப்டேட் வருகின்றனர் என்பதும் ஆனால் ‘வலிமை’ அப்டேட் தான் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் இம்மாத இறுதியில் கண்டிப்பாக வலிமை அப்டேட் ரிலீஸ் தேதியுடன் வரும் என்றும் படக்குழுவினர் கலந்து செய்திகள் வெளியாகியுள்ளது.

 

Trending

Exit mobile version