சினிமா செய்திகள்
முதல்வரிடம் வலிமை பட அப்டேட் கேட்ட தல ரசிகர்!
கோவையில் முதல்வர் பழனிசாமியிடம் அஜித் ரசிகர் ஒருவர், வலிமை பட அப்டேட் குறித்து கேள்வி கேட்ட சம்பவம் வைரலாகி வருகிறது.
அஜித் ரசிகர்கள் என்றாலே ஆரவாரம் மற்றும் கொண்டாட்டத்திற்கு பஞ்சம் இருக்காது. ஹாச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்டபார்வை படத்திற்கு பிறகு தற்போது வலிமை படத்தில் நடிகர் அஜித் நடித்து வருகிறார். கொரோனா பரவல் குறைந்த நிலையில், வலிமை படப்பிடிப்பு தளத்தில் நடக்கும் கட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்த படத்தின் மேலான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் கோவையில் பிரச்சரத்தில் ஈடுபட்ட முதல்வரிடம் கூட்டத்தில் இருந்த பயம் அறியா இளம் தல ரசிகர் வலிமை படத்தை பற்றி அப்டேட் வழங்கும்படி வலியுறுத்தினார். இந்த நிகழ்வு சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் அஜித், ஹுமா குரேஷி, ஜான்வி கபூர் ஆகியோர் நடிக்கின்றனர்.இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.