சினிமா

ரஜினியுடன் போட்டி வேண்டாம்!.. வலிமை ரிலீஸ் தேதியை முடிவு செய்த அஜித்..

Published

on

தல அஜித் நடித்து வரும் ’வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இன்னும் ஒரு வார படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளது. அந்த காட்சிகளை ரஷ்யாவில் எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. எனவே, விரைவில் படக்குழு ரஷ்யா செல்லவுள்ளது.

‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி மிகக் குறைந்த நாட்களில் 10 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை செய்தது. அதுமட்டுமன்றி ’வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் மோஷன் போஸ்டர் வீடியோ வெளியாகி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இப்படத்தை ஆயுதபூஜையான அக்டோபர் 14ம் தேதி வெளியிட அஜித் ஓகே சொல்லிவிட்டாராம். அன்று அவரின் செண்டிமெண்ட் தேதியான வியாழக்கிழமையும் வருகிறது. மேலும், தொடர் விடுமுறைகளும் வருகிறது.

முதல் வலிமை படத்தை தீபாவளிக்கு அண்ணாத்தே படத்தோடு சேர்த்து வெளியிடவே படக்குழு திட்டமிட்டது. ஆனால், சமூகவலைத்தளங்களில் அஜித் ரசிகர்களும், ரஜினி ரசிகர்களும் மோதிக்கொள்வார்கள் என்பதாலேயே அஜித் அக்டோபர் மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version