சினிமா செய்திகள்

மூன்றாம் முறையாக இணைகிறார்களா தல அஜித்- போனி கபூர்- விநோத் காம்போ..?

Published

on

தல அஜித் உடன் தயாரிப்பாளர் போனி கபூர் இயக்குநர் விநோத் ஆகிய மூவர் கொண்ட காம்போ மீண்டும் மூன்றாம் முறையாகப் புதிய படம் ஒன்றுக்கு இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தல அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் இயக்குநர் விநோத் தயாரிப்பாளர் போனி கபூர் என்னும் காம்போ தமிழ் சினிமாவில் உருவானது. அதன் பின்னர் மீண்டும் இதே காம்போ இணைந்து வலிமை படத்தை உருவாக்கி வருகின்றனர். கொரோனா கட்டுப்பாடுகள், தளர்வுகள் என மாறிமாறி தாமதமாகி வலிமை படப்பிடிப்பே இன்னும் முழுமையாக நிறைவு பெறவில்லை.

இந்த சூழலில் மூன்றாவதாக ஒரு படத்துக்கு இதே காம்போ இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. தல அஜித்-க்கு மிகவும் நெருங்கிய குடும்ப உறவினராகவே மாறிவிட்டார் போனி கபூர். ஶ்ரீதேவி உயிரோடு இருந்த காலத்திலேயே அஜித் குடும்பமும் போனி கபூர் குடும்பமும் நெருக்கமாகத் தான் இருந்து வந்தனர்.

தொடர்ந்து இருவீட்டார் விசேஷங்களிலும் இரு குடும்பத்தாரும் இதுவரையில் பங்குபெற்று வருகின்றனர். போனி கபூருக்கு இயக்குநர் விநோத் உடனும் நல்ல உறவு இருப்பதால் மீண்டும் மூன்றாம் முறையாக இந்த காம்போ இணைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்கிறனர் கோலிவுட் வட்டாரத்தினர். மூன்றாவது படத்தையும் தல அஜித் உடன் இயக்குநர் விநோத் எடுத்தால் சிறுத்தை சிவா- அஜித் காம்போ சாதனையை விநோத்தும் சமன் செய்துவிடுவார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version