சினிமா செய்திகள்

பிரிட்டனில் அஜித்தின் பைக் பயணம்: வைரல் புகைப்படங்கள்!

Published

on

தல அஜித் ஒன்று சினிமா படப்பிடிப்பில் இருப்பார் அல்லது பைக் பயணத்தில் இருப்பார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் தல அஜித் நடித்து வரும் ’அஜீத் 61’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் படப்பிடிப்பு முடிந்து அடுத்த சில நாட்களில் அவர் பைக் பயணம் செய்வதற்காக பிரிட்டன் நாட்டிற்கு கிளம்பி சென்று விட்டார்.

அஜீத் மற்றும் அவரது குழுவினர் பிரிட்டனில் பைக் பயணம் செய்யும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன. அஜித் விரைவில் உலக நாடுகள் முழுவதும் பைக்கில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். அதற்கு பயிற்சி எடுப்பதற்காக அவ்வப்போது இந்தியா மற்றும் வெளி நாடுகளில் பைக் பயணம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்போது பிரிட்டனில் அவர் பைக் பயணம் செய்து கொண்டிருக்கும் நிலையில் அது குறித்த புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் இணையதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

‘அஜித் 61 படப்பிடிப்பு முடிந்தவுடன் ’அஜித் 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் அஜித் உலக நாடுகளுக்கு பைக் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’அஜித் 61 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெற இருப்பதாகவும் இந்தப் படப்பிடிப்பில் அஜித்துடன் மஞ்சுவாரியாரும் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version