சினிமா செய்திகள்

அஜித், விஜய் ரகசிய சந்திப்பில் அரசியல் பேசப்பட்டதா? பரபரப்பு தகவல்

Published

on

அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவரும் தொழில்முறையில் போட்டியாளர்களாக இருந்தாலும் தனிப்பட்ட முறையில் நண்பர்கள் என்பது கோலிவுட் திரை உலகினர் அனைவருக்கும் தெரிந்ததே. மேலும் குடும்ப விதமாக இரு தரப்பும் அடிக்கடி சந்தித்துக் கொள்வார்கள் என்று கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அஜீத் விஜய் ஆகிய இருவர் மட்டும் உதவியாளர்கள் கூட இல்லாமல் சில மணி நேரம் ரகசியமாக சந்தித்ததாகவும் இந்த சந்திப்பில் அரசியல் உள்பட பல முக்கிய ஆலோசனை நடந்ததாகவும் கூறப்படுகிறது .

நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அரசியலில் ஈடுபடுவதை என்றுமே விரும்பாத அஜித் அகிய இருவரும் சந்தித்து இருப்பது கோலிவுட் திரையுலகை மட்டுமின்றி தமிழக அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும் இந்த சந்திப்பில் என்ன பேசப்பட்டிருக்கும் என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version