சினிமா செய்திகள்

ட்விட்டரில் போட்டி போடும் அஜித், விஜய் ரசிகர்கள்!

Published

on

டுவிட்டரில் விஜய், அஜித் ரசிகர்கள் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு மோதிக் கொண்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இங்கிலாந்திலிருந்து விஜய் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விதிக்க தடை கோரிய வழக்கில் நடிகர் விஜய்க்கு நேற்று ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவு காரணமாக அஜித் ரசிகர்கள் #வரிகட்டுங்கவிஜய் என்ற ஹேஷ்டேக்கை டுவிட்டரில் வைரலாக்கி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உண்மையில் நடிகர் விஜய் கடந்த 2012ஆம் ஆண்டு வாங்கிய காருக்கு மொத்தமாக வரி செலுத்தி விட்டார். அதன் பின்னர் நுழைவு வரியை மட்டும் தான் அவர் குறைப்பது அல்லது நீக்குவது குறித்த வழக்கை பதிவு செய்தார். இந்த வழக்கில்தான் நுழைவு வரி கட்ட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதோடு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தது.

அஜித், விஜய்

ஆனால் அஜித் ரசிகர்கள் விஜய் தனது காருக்கே வரி செலுத்தவில்லை என்பது போன்ற பதிவுகளை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விஜய்க்கு ஆதரவாக விஜய் ரசிகர்கள் டுவிட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். #WeSupportThalapathyVijay என்ற ஹேஷ்டேக்கை தளபதி விஜய் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி விஜய்க்கு எதிராக டிரெண்ட் செய்து வரும் அஜித் ரசிகர்களுக்கு போட்டியாக #கடனைஅடைங்கஅஜித் என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் டிரண்டாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய் அஜித் ரசிகர்களை பொருத்தவரை டுவிட்டரில் அவ்வப்போது மோதிக் கொள்வது வழக்கமான ஒன்றாக இருந்தாலும் நேற்றைய நீதிமன்ற தீர்ப்புக்கு பின் விஜய், அஜித் ரசிகர்கள் காரசாரமாக மோதிக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending

Exit mobile version