சினிமா

அஜித்-ஷாலினியின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரல்!

Published

on

தல அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படத்தின் எந்த ஒரு அப்டேட்டும் கடந்த ஒரு வருடமாக வரவில்லை என்றாலும் அஜித் குறித்த செய்திகள் தினமும் இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று அஜித் சைக்கிள் ஓட்டுவது குறித்த புகைப்படங்கள் வைரல் ஆன நிலையில் இன்று அஜீத் தனது மனைவி ஷாலினியுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் குறித்த செய்தி வைரலாகி வருகிறது.

சமீபத்தில் அஜித் மற்றும் ஷாலினி ஆகிய இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் தற்போது இணையதளத்தில் லீக் ஆகி உள்ளது. இந்த புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் பகிர்ந்து வருவதால் வைரலாகி வருவதோடு டிரெண்டிலும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ’வலிமை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் வெளிநாட்டில் நடைபெற உள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கி ஆகஸ்ட் மாதம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

’வலிமை’ படத்தை அடுத்து அஜித்தின் அடுத்த படத்தை விஷ்ணுவர்தன் இயக்க வாய்ப்பு இருப்பதாகவும், இந்த படத்தையும் போனிகபூரே தயாரிப்பார் என்றும் தெரிகிறது

seithichurul

Trending

Exit mobile version