சினிமா செய்திகள்

அஜித்- ஷாலினியின் 14 வயது மகளா இவர்? தமிழ் சினிமா விட்டுவைக்குமா?

Published

on

தமிழ் திரை உலகின் நட்சத்திர தம்பதிகளில் அஜித்-ஷாலினி தம்பதியின் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இந்த தம்பதிக்கு கடந்த 2008ஆம் ஆண்டில் அனோஷ்கா என்ற மகள் பிறந்தார். இவருக்கு தற்போது 14 வயது ஆகியிருக்கும் நிலையில் சமீபத்தில் இவருடைய புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் ஷாலினி, அனோஷ்கா மற்றும் ஷாமிலி ஆகிய மூவரும் மகளிர் தின கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

குறிப்பாக இந்த புகைப்படத்தில் அஜித் – ஷாலினி மகள் அனோஷ்கா புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஷாலினியை விட இரண்டு மடங்கு அழகாக இருக்கும் அனோஷ்கா விரைவில் தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆவாரா? தமிழ் சினிமா பிரபலங்கள் அவரை விட்டு வைப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

பிரபல இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதிஷங்கர் உள்பட பல திரையுலக பிரபலங்களின் மகள்கள் தமிழ் திரையுலகில் ஜொலித்து வரும் நிலையில் அஜித் மகளும் அந்தவகையில் ஹீரோயினாக மாறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

seithichurul

Trending

Exit mobile version