சினிமா செய்திகள்

‘அஜித் 62’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட லைகா!

Published

on

அஜித் நடிக்கவிருக்கும் 61வது திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளது என்பது தெரிந்ததே. எச் வினோத் இயக்கத்தில் ஜிப்ரான் இசையில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கும் இந்த படம் மணிஹெய்ஸ்ட் என்ற வெப்தொடரின் சாயல் என்றும் கூறப்பட்டது

இந்த நிலையில் அஜீத் 62 திரைப்படம் குறித்த தகவல் சமீபத்தில் வெளியானது என்பதும் லைகா தயாரிப்பில் அனிருத் இசையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இந்த படம் உருவாகும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் லைக்கா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு படத்தை உறுதி செய்துள்ளது. அஜித்துடன் முதன்முதலாக இணைய உள்ளதை அடுத்து தாங்கள் நிறுவனம் பெருமை கொள்வதாகவும் அஜித் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக உள்ளது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version