சினிமா செய்திகள்
ஒரே ஷெட்யூலில் மொத்த படத்தையும் முடிக்க விக்னேஷ் சிவன் திட்டம்: அஜித் ஒத்துழைப்பாரா?
அஜித் நடிக்கவிருக்கும் 62வது திரைப் படத்தை இயக்கப்போகும் விக்னேஷ் சிவன் ஒரே ஷெட்யூலில் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை அடுத்து நவம்பர் அல்லது டிசம்பர் தொடங்கும் ‘அஜித் 62 படத்தின் படப்பிடிப்பை ஒரே ஷெட்யூலில் முடிக்க விக்னேஷ் சிவன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் அஜித் தொழிலதிபராக நடிக்க இருப்பதாகவும் இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப கதையம்சம் கொண்ட படம் என்றும் கூறப்படுகிறது .
தொழிலில் ஏற்படும் நஷ்டம் அதனால் குடும்பத்தில் ஏற்படும் பாதிப்பு அதை அஜித் சமாளிக்கும் விதம் இதுதான் இந்த படத்தின் கதை என்று கூறப்படுகிறது .
இந்த படம் அஜீத்தின் 61 வது படம் வெளியான ஒரு சில மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்காக பாடல் கம்போஸ் செய்யும் பணியை அனிருத் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.