சினிமா செய்திகள்

’அஜித் 62’ படத்தில் நயன்தாரா ஹீரோயின் இல்லையா? பரபரப்பு தகவல்!

Published

on

அஜித் நடிக்க இருக்கும் 61 வது படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்காத நிலையில் அஜித் 62 படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் அஜித் நடிக்கும் இந்த படம் குடும்ப சென்டிமென்ட் கலந்த காமெடி படம் என்றும் அதிரடி ஆக்ஷன் கலந்து இருக்கும் என்றும் கூறப்படுகிறது .

விக்னேஷ் சிவனின் வழக்கமான பாணியில் இல்லாமல் அஜித்துக்காக எழுதப்பட்ட கதை என்பதால் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

மேலும் இந்த படத்தை விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தான் நிர்வாகத் தயாரிப்பு நிறுவனமாக செயல்படுகிறது என்பதால் இந்த படத்தின் நாயகி நயன்தாரா தான் என்றும் கூறப்பட்டது.

ஆனால் தற்போதுள்ள தகவலின்படி இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க வில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் முக்கிய கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நாயகியாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் இடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதேபோல் இந்த படத்தில் வில்லனாக நடிக்க அர்ஜுனுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறதாம். ஏற்கனவே மங்காத்தா படத்தில் அஜீத் மற்றும் அர்ஜுன் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending

Exit mobile version