விளையாட்டு

கங்காரு பொம்மை கேக்… வெட்ட மறுத்த ரஹானேவுக்குக் குவியும் பாராட்டுகள்..!

Published

on

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை வெற்றியோடு நிறைவு செய்து நாடு திரும்பி உள்ள இந்தியக் கிரிக்கெட் அணி வீரர்களுக்கு தத்தமது சொந்த ஊர்களில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த வகையில் மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் கிரிக்கெட் வீரர் ரஹானே. ஆஸ்திரேலிய வெற்றிக்குப் பின்னர் சொந்த ஊர் திரும்பியவருக்கு அவரது அண்டை வீட்டார்கள், நண்பர்கள், ரசிகர்கள் இணைந்து வரவேற்பு விழாவுக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். இந்த வரவேற்பு விழாவில் கேக் வெட்டுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், கேக் வெட்ட ரஹானே மறுத்துவிட்டார். முதலில் ஷாக் ஆன கூடியிருந்த ரசிகர்கள் பின்னர் உண்மைக் காரணம் தெரிந்த உடன் ரஹானேவை கூடுதலாகப் பாராட்டினர். காரணம், ரஹானே வெட்டுவதாக இருந்த கேக் மீது கங்காரு உருவத்தில் ஆன சாப்பிடக் கூடிய வகையிலான ஒரு பொம்மை வைக்கப்பட்டு இருந்தது.

ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதைக் குறிக்க அது போல கேக் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதலில் கேக்கை கவனிக்காமல் அதன் முன்னர் ரஹானே வந்து நின்றுவிட்டார். வெட்டும் போது தான் கங்காரு கேக் என்பதை உணர்ந்துள்ளார். கங்காரு என்பது ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கு. அந்தக் கேக்கை வெட்டி அதன் மூலம் இன்னொரு நாட்டையும் அந்த நாட்டின் பெருமையையும் கவுரவக் குறைச்சல் உடன் நடத்தக் கூடாது என்பதால் இந்த கேக்கை வெட்ட மறுக்கிறேன் என ரஹானே அங்கிருந்த அனைவரிடமும் தெரிவித்தார். இந்த வீடியோ காட்சி தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending

Exit mobile version