இந்தியா

உலக வங்கி தலைவராக போட்டியின்றி தேர்வு.. அமெரிக்க இந்தியருக்கு அடித்த அதிர்ஷ்டம்..!

Published

on

அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா என்பவர் உலக வங்கி தலைவராக போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், உலக வங்கியை வழிநடத்த அஜய் பங்காவை பரிந்துரை செய்வதாக அறிவித்தார். உலகளாவிய நிறுவனத்தை வழிநடத்த அவர்தான் சரியான நபர் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் 63 வயதான அஜய் பங்காவுக்கு எதிராக வேறு எந்த நாடும் வேட்பாளரை நிறுத்தாததை அடுத்து உலக வங்கி தலைவராக ஒரு மனதாக அஜய் பங்கா தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மே மாத தொடக்கத்தில் அவர் இந்த பதவியை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் வேட்பாளரான அஜய் பங்கா உலக வங்கி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என ஏற்கனவே அமெரிக்க கருவூல செயலாளர் தெரிவித்திருந்த நிலையில் அவர் கூறியபடியே தற்போது அஜய் பங்கா உலக வங்கி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்

வரும் நூற்றாண்டில் சவால்களை எதிர்கொள்ள சிறப்பான வகையில் நிறுவனத்தை மேம்படுத்த, நமது முன்னேற்றத்தை விரிவு படுத்திய அஜய் பங்கா உலக வங்கியையும் சிறப்பாக வழி நடத்துவார் என்றும் முக்கியமாக வறுமை ஒழிப்பு மற்றும் வளர்ச்சி இலக்குகளை அவர் எட்டுவார் என்றும் அமெரிக்க கருவூல செயலாளர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகிய இரண்டு சிறந்த சர்வதேச நிதி நிறுவனங்களில் ஒன்றிற்கு தலைமை தாங்கும் முதல் இந்திய-அமெரிக்கர் மற்றும் சீக்கிய-அமெரிக்கர் என்ற பெருமையை பங்கா பெறுவார்.

அஜய் பங்கா உலக வங்கி தலைவராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், ‘இந்தியாவில் வளர்ந்த பங்கா, வளரும் நாடுகள் எதிர்கொள்ளும் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் மற்றும் வறுமையைக் குறைப்பதற்கும் செழிப்பை விரிவுபடுத்துவதற்கும் உலக வங்கி தனது லட்சிய நிகழ்ச்சி நிரலை எவ்வாறு வழங்க முடியும் என்பது குறித்த தனித்துவமான கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளது என்று ஜனாதிபதி ஜோ பைடன் கூறினார்.

seithichurul

Trending

Exit mobile version