சினிமா செய்திகள்

ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடி இந்த பிரபல நடிகையா? ஆச்சரியத்தில் கோலிவுட் திரையுலகினர்!

Published

on

ஆர்ஜே பாலாஜி நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்திற்கு பிரபல நடிகை ஒருவர் ஜோடியாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானதை அடுத்து திரையுலகினர் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர்.

ரேடியோ ஆர்ஜேவாக இருந்த பாலாஜி அதன் பின்னர் காமெடி வேடங்களில் திரைப்படங்களில் நடித்து வந்தார். இதனை அடுத்து அடுத்த கட்டமாக அவர் ’எல்.கே.ஜி’ என்ற திரைப் படத்தில் ஹீரோவாகவும் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார் என்பதும் அந்த படம் கொடுத்த மிகப்பெரிய வெற்றி காரணமாக ’மூக்குத்தி அம்மன்’ என்ற திரைப்படத்தை இயக்கி நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அவர் ’வீட்ல விசேஷங்க’ என்ற திரைப்படத்தை நடித்து இயக்கி முடித்துள்ள நிலையில் அடுத்ததாக ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தில் ஆர்ஜே பாலாஜி நடிக்க இருக்கும் நிலையில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை கிருஷ்ணகுமார் என்பவர் இயக்கி உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்ற நிலையில் படக்குழுவினர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version