சினிமா செய்திகள்

’தளபதி 66’ திரைப்படத்தில் இணைகிறாரா ஐஸ்வர்யா ராய்? பரபரப்பு தகவல்

Published

on

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 66’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

முழுக்க முழுக்க குடும்ப சென்டிமெண்ட் கலந்த திரைப்படமாக தளபதி 66 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் ஸ்டண்ட் காட்சிகளை இல்லை என்றும் சென்டிமென்ட் காட்சிகள் மற்றும் ரொமான்ஸ் காட்சிகள் மட்டுமே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் விஜய் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க வரும் அதிகாரியாக ஐஸ்வர்யாராய் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் அவரிடம் இது குறித்து படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது .

தளபதி 66 திரைப்படத்தில் நடிப்பது குறித்து ஐஸ்வர்யா ராய் இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் ஆனால் இயக்குனர் சொன்ன கேரக்டர் அவருக்கு பிடித்து விட்டதால் அவர் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே தலைவர் 169 திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியா ஐஸ்வர்யாராய் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது தளபதி 66 திரைப்படத்திலும் ஐஸ்வர்யாராய் நடிக்க இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version