சினிமா செய்திகள்

கமல், ரஜினி இருவருக்கும் ஜோடியாகும் ஐஸ்வர்யாராய்? இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை

Published

on

கமலஹாசன் ரஜினிகாந்த் ஆகிய இருவரின் அடுத்த படங்களில் ஐஸ்வர்யா ராய் தான் நாயகியாக நடிக்க இருப்பதாகவும் இப்பொழுது இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது .

ஏற்கனவே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகயிருக்கும் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் தான் நாயகி என்றும் இது குறித்து பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் கமல்ஹாசன் தற்போது விக்ரம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்ததாக தலைவன் இருக்கிறான் என்ற படத்தை தொடங்க உள்ளார். இந்த படத்தில் நாயகியாகவும் நடிக்க ஐஸ்வர்யா ராயுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் இந்த படத்தை கமல்ஹாசன் இயக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தியன் திரைப்படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிக்க பேச்சுவார்த்தை நடந்த போது கால்ஷீட் பிரச்சனை காரணமாக அந்த படத்தில் அவர் நடிக்கவில்லை. இதனை அடுத்து முதல் முதலாக தற்போது கமல்ஹாசன் ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிக்க உள்ளார் என்பதும், ரஜினிகாந்துக்கு ஜோடியாக ஏற்கனவே எந்திரன் படத்தில் ஐஸ்வர்யாராய் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version