கேலரி

அடுத்த வேலையில் பிஸியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…வைரலாகும் புகைப்படம்….

Published

on

நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர் நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 18 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த அவர்கள் சமீபத்தில் ஒருவரை ஒருவர் பிரிவதாக அறிவித்தனர்.

இது ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி, திரையுலகினருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. விரைவில் முறையான விவாகரத்துக்கு இருவரும் விண்ணப்பிக்கவுள்ளனர்.

இந்நிலையில், ஐஸ்வர்யா தனது அடுத்த வேலையில் பிஸியாகி விட்டார். ஐஸ்வர்யா ஏற்கனவே 3, வை ராஜா வை என 2 திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது, காதலர் தினத்திற்காக ஒரு ஆல்பம் பாடலை அவர் இயக்கவுள்ளார். இதற்கான படப்பிடிப்பு ஜனவரி 25ம் தேதி துவங்குகிறது.

இந்த படக்குழுவினரிடன் ஐஸ்வர்யா ஆலோசனை நடத்தும் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version