சினிமா

என்ன ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புதுசா கண்ணெல்லாம் அடிக்கிறாங்க?

Published

on

நடிகர் தனுஷை பிரிந்ததில் இருந்தே சமூக வலைதளத்தில் செம ஆக்டிவாக உள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஃபிட்னஸ் ஃப்ரீக்காகவே மாறி விட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் டைட் ஜிம் உடையில் உடற்பயிற்சி செய்யும் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில், வேடிக்கை என்னவென்றால், உடற்பயிற்சி செய்துக் கொண்டே கேமராவை பார்த்து அவர் கண்ணடிப்பது தான்.

#image_title

திருவண்ணாமலையில் டென்ட் போட்டு லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். படத்தில் நடித்து வரும் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் CCL எனப்படும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் மேட்ச்சில் ஆடி வருவதாக போட்டோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்புக்காக மங்களூருவில் உள்ளார் என்றும் கூறுகின்றனர். இந்நிலையில், மற்ற நடிகர்களை வைத்து லால் சலாம் படத்தை இயக்கும் வேலைகளில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஈடுபட்டு வருகிறாரா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.

#image_title

அடிக்கடி உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை பதிவிட்டு வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது ஆரஞ்சு நிற ஜிம் உடையில் டம்புள்ஸை எடுத்துக் கொண்டு கர்லா கட்டை போல சுற்றி உடற்பயிற்சி செய்தவாறே கண் அடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Trending

Exit mobile version