சினிமா செய்திகள்

மீண்டும் விஜய்சேதுபதியுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

Published

on

ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை, செக்கச்சிவந்த வானம், திருடன் போலீஸ் மற்றும் இடம் பொருள் ஏவல் ஆகிய படங்களில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது மேலும், ஒரு புதிய படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாகி உள்ளார்.

கேஜேஆர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பி. விருமாண்டி இயக்கத்தில் உருவாகவுள்ள க/பெ. ரணசிங்கம் படத்தில் தான் இந்த ஜோடி மீண்டும் இணைந்துள்ளது.

சென்னையில் நேற்று போடப்பட்ட படத்தின் புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டூடியோஸ் தனது சமூக வலைதள பக்கங்களில் நேற்று இரவு வெளியிட்டு வைரலாக்கியுள்ளது.

கணவர் பெயர் ரணசிங்கம் எனும் அர்த்தத்தில் டைட்டில் இருப்பதால், படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கூடுதல் முக்கியத்துவம் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

பாண்டிராஜ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், விஜய் சேதுபதியுடனும் புது படத்தில் இணைந்துள்ளதால், கூடுதல் உற்சாகத்தில் இருக்கிறார்.

seithichurul

Trending

Exit mobile version