சினிமா செய்திகள்

கனா தெலுங்கு ரீமேக்கிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் கன்ஃபார்ம்!

Published

on

சிவகார்த்திகேயனின் முதல் தயாரிப்பு படமான கனா படம், தமிழில் மிகச்சிறப்பான வெற்றியை பெற்றது. அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் இந்த படத்தில் பெண் கிரிக்கெட் வீராங்கனை கெளசல்யா முருகேசனாக ஐஸ்வர்யா நடித்திருந்தார்.

இந்நிலையில், இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளனர். ’கெளசல்யா கிருஷ்ணமூர்த்தி கிரிக்கெட்டர்’ என்ற பெயரில் உருவாகவுள்ள இந்த படத்தை பீமனேனி சீனிவாசராவ் இயக்குகிறார்.

பல நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதும், ஐஸ்வர்யா ராஜேச்ஷின் நடிப்பு தனது மனதை விட்டு அகலவில்லை என தெரிவித்த இயக்குநர், தெலுங்கு ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷையே நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.

விஜய்தேவரகொண்டாவுக்கு நாயகியாக ஒரு படத்திலு, சலீம் இயக்கத்தில் ஒரு தெலுங்கு படம் என இரண்டு டோலிவுட் படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இது மூன்றாவது தெலுங்கு படம்.

இதில், ராஜேந்திர பிரசாத், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கவுள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version