சினிமா செய்திகள்

ஐஸ்வர்யா ராய் மீம் சர்ச்சை; நடிகர் விவேக் ஓபராய் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு!

Published

on

தேர்தல் கருத்துக் கணிப்புகள் ஒரு மாதிரியும், தேர்தல் முடிவுகள் வேறு மாதிரியும் வரும் என்பதை சுட்டிக் காட்ட, நடிகை ஐஸ்வர்யா ராய், சல்மான் கான் மற்றும் விவேக் ஓபராயுடன் பழகியதும் பின்னர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டதும் என படங்கள் அடங்கிய மீம்ஸை நடிகர் விவேக் ஓபராய் ட்விட்டரில் ஷேர் செய்திருந்தார். இதற்காக அவருக்கு கடுமையான கண்டனங்கள் மற்றும் காவல் துறையிலும் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நடிகர் விவேக் ஓபராய்க்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக வந்த எச்சரிக்கையை அடுத்து, நேற்று நள்ளிரவு முதல் நடிகர் விவேக் ஓபராய் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில், நாளை விவேக் ஓபராய் நடிப்பில் உருவாகியுள்ள பிஎம் நரேந்திர மோடி படமும் ரிலீசாவது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version