செய்திகள்

மீண்டும் உயரும் ஏர்டெல் ப்ரீபெய்டு ரீசார்ஜ் – பயனாளர்கள் அதிர்ச்சி

Published

on

இந்தியாவில் செல்போன் ரீசார்ஜ் சேவையை வழங்கி வரும் நிறுவனங்களில் முக்கியமானது ஏர்டெல் நெட்வொர்க். ஏர்செல் நிறுவனம் மூடப்பட்ட போது அந்த எண்களை பலரும் ஏர்டெல் நெட்வொர்க்குக்கு மாற்றினர்.

இந்நிலையில், ஏர்டெல் நிறுவனாம் ரீசார்ஜ் தொகையை மீண்டும் 20 சதவீதம் ஏற்றியுள்ளது. இந்த விலை ஏற்றம் நவம்பர் 26ம் தேதி முதல் அமுலுக்கு வருகிறது.

ஏற்கனவே 28 நாட்களுக்கு 49 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் 34 ரூபாய்க்கு பேசலாம் என்பதை திடீரென விலை ஏற்றி ரூ. 79 என அறிவித்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. அதேபோல், அனைத்து ரீசார்ஜ் திட்டங்களிலும் 20 சதவீத கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

பார்தி ஏர்டெல் நிறுவனம் கடும் நிதிநெருக்கடியில் சிக்கியிருப்பதால் இதிலிருந்து மீள்வதற்காக இந்த விலை ஏற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் வோடபோன் ஐடியா நிறுவனமும் விரைவில் விலை ஏற்றத்தை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களின் வாடிக்கையாளர்களில் 90 சதவீதம் பேர் ப்ரிபெய்டு வாடிக்கையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் நிறுவனத்தின் புதிய ப்ரீபெய்டு கட்டணம்:

airtel

Trending

Exit mobile version