வணிகம்

சென்னையில் 5ஜி சேவையைத் தொடங்கியது ஏர்டெல்.. கட்டணம் எவ்வளவு தெரியுமா?

Published

on

இந்தியாவின் 2-ம் மிகப் பெரிய ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனம் சென்னையில் தங்களது 5ஜி சேவையை இன்று முதல் தொடங்கியுள்ளது.

ஏர்டெல் நிறுவனம் சென்னை மட்டுமல்லாமல் டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், சில்லிகிரி, நாக்பூர் மற்றும் வார்னாடி உள்ளிட்ட நகரங்களிலும் 5 ஜி சேவையை வியாழக்கிழமை முதல் தொடங்கியுள்ளது.

ஏர்டெல் வாடிக்கையாளர்கள் தங்களது போனில் 5ஜி இருந்தால் இந்த சேவையை உடனடியாக சென்னையில் பயன்படுத்தலாம்.

5ஜி சேவைக்காகக் கூடுதல் கட்டணம் ஏதுமில்லை. 4ஜி ரீசார்ஜ் கட்டணங்களே 5 ஜி சேவைக்கும் செல்லும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

5ஜி சேவையில் 20 முதல் ல்30 மடங்கு வரையில் இணையதள வேகமாக அதிகம் இருக்கும். காணொளிகளைத் தக்கு தடையின்றி பார்க்கலாம் எனவும் ஏர்டெல் தெரிவித்துள்ளது.

ஜியோ நிறுவனம் தங்களது 5ஜி சேவை தீபாவளி முதல் கிடைக்கும் என தெரிவித்துள்ளது. வோடாபோன் ஐடியா நிறுவனம் விரைவில் 5ஜி சேவையைத் தொடங்கும் என அறிவித்துள்ளது. ஆனால் எப்போது என தெரிவிக்கவில்லை.

5ஜி இணையதள சேவையில் 1 ஜிபி கோப்பை 3 நொடியில் பதிவிறக்கம் செய்ய முடியும் என கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version