செய்திகள்

ராக்ஷாபந்தன் எதிரொலி விமான டிக்கெட் கட்டணங்கள் 46% வரை உயர்வு!

Published

on

ஆகஸ்ட் மாதம் 19-ம் தேதி ராக்ஷாபந்தன் கொண்டாடப்பட உள்ள நிலையில், விமான டிக்கெட் கட்டணங்கள் அந்த வாரம் விமான டிக்கெட் கட்டணங்கள் 46% வரை உயர்ந்துள்ளது என பிஸ்னஸ் ஸ்டாண்டர்டு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ராக்ஷாபந்தன் ஆகஸ்ட் 19-ம் தேதி, திங்கட்கிழமை கொண்டாடப்படுவது மட்டுமல்லாமல், அதற்கு முன்னதாக ஆகஸ்ட் 15 வியாழக்கிழமை வருகிறது. எனவே பெரு நகரங்களில் வேலை செய்யும் பலர் வெள்ளிக்கிழமை ஒரு நாள் விடுமுறை எடுத்துக்கொண்டால், 5 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என திட்டமிட்டுள்ளனர்.

அதன் ஒரு பகிதியாக அவர்கள் விமான பயணம் செய்ய திட்டமிட்டுள்ளது போன்றவை, டிக்கெட் கட்டணங்கள் 46 சதவிகிதம் வரை விலை உயர்ந்துள்ளதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

அது மட்டுமல்லாமல், பெரும் நிதி நெருக்கடியில் தவித்து வரும் விமான நிறுவனங்கள் தங்களது விமான போக்குவரத்தைக் குறைத்துள்ளனர்.

அதற்கு விமான பழுது, நிதி சிக்கல் போன்ற பல்வேறு காரணங்களை விமான நிறுவனங்கள் கூறுகின்றன. இண்டிகோ நிறுவனம் இது போன்ற காரணங்களுக்காக 70 விமானங்களைப் போக்குவரத்துக்குப் பயன்படுத்த முடியாமல் தரயிரக்கம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. விமானங்கள் குறைந்துள்ளதும் விமான டிக்கெட் கட்டணம் உயர்வுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

இக்ஸிகோ டேட்டா பரிசீலனையில், பெங்களூரு-கொச்சி வழித்தடத்தின் சராசரி கட்டணம் ரூ.3,446, 46.3% உயர்வு மற்றும் பெங்களூரு-மும்பை வழித்தடத்தின் சராசரி கட்டணம் ரூ.3,969, 37.6% உயர்வு ஆகியவை கண்டறியப்பட்டுள்ளது. விமானங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் இந்த கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது, நடப்பு ஆண்டு ஆகஸ்ட் மாதம் மும்பை – பெங்களூரு வழித்தடத்தில் 4.8 சதவீதம் வரை விமான சேவை குறைந்துள்ளது.

இந்த கட்டண உயர்வு பயணிகளுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள்:

பட்ஜெட் பாதிப்பு: திட்டமிடப்பட்ட பயணங்களுக்கு அதிக பணம் செலவிட வேண்டிய நிலை ஏற்படுகிறது.
பயண திட்டங்களை மாற்ற வேண்டிய கட்டாயம்: சிலர் கட்டண உயர்வு காரணமாக தங்கள் பயண திட்டங்களை மாற்றிக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது.
பயண வசதி குறைவு: விமானங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பயணிகளுக்கு இருக்கை கிடைப்பது கடினமாகிறது.

பயணிகள் எடுக்கக்கூடிய முன்னெச்சரிக்கைகள்:

முன்கூட்டியே முன்பதிவு: விமான டிக்கெட்டுகளை முன்கூட்டியே முன்பதிவு செய்வதன் மூலம், குறைந்த கட்டணத்தில் டிக்கெட்டுகளை பெறலாம்.
விரிவான தேடல்: பல்வேறு விமான நிறுவனங்களின் வலைத்தளங்களை ஒப்பிட்டு, மலிவான டிக்கெட்டுகளை தேர்வு செய்யலாம்.
பிற போக்குவரத்து வசதிகளை பயன்படுத்துதல்: விமான பயணம் மிகவும் விலை உயர்ந்ததாக இருந்தால், ரயில் அல்லது பேருந்து போன்ற பிற போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தலாம்.

இந்த கட்டண உயர்வு தொடர்பாக அரசு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள்:

விமான நிறுவனங்களை கண்காணித்தல்: விமான நிறுவனங்கள் கட்டணங்களை காரணமின்றி உயர்த்துவதை தடுக்க, அரசு அவற்றை கண்காணிக்க வேண்டும்.
போட்டி அதிகரிப்பு: புதிய விமான நிறுவனங்களை அனுமதிப்பதன் மூலம், போட்டியை அதிகரித்து, கட்டணங்களை குறைக்க முடியும்.
எரிபொருள் மீதான வரிகளை குறைத்தல்: எரிபொருள் மீதான வரிகளை குறைப்பதன் மூலம், விமான நிறுவனங்களின் இயக்கச் செலவுகளை குறைத்து, கட்டணங்களை கட்டுப்படுத்தலாம்.

author avatar
Tamilarasu

Trending

Exit mobile version