உலகம்

அதிர்ச்சி தகவல்! காற்று மாசுவால் 70 லட்சம் குழந்தைகள் இறப்பு!

Published

on

போகிப் பண்டியான இன்று நாம் பழைய பொருட்கள், குப்பைகளை எரித்து காற்று மாசுவை அதிகப்படுத்தி இருக்கிறோம்.

இந்த நேரத்தில் உலக சுகாதார மையம் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதன் படி உலகளவில் காற்று மாசுவால் குறைபிரசத்தில் பிறந்த குழந்தைகள் ஆண்டுக்கு 70 லட்சம் இறந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 3 நிமிடத்திற்கு ஒரு குழந்தை காற்று மாசுவால் இறக்கின்றனர். அதிகபட்சமாக ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் தான் இந்த குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது.

போகிப் பண்டிகையின் போது நாம் எரிக்கும் டயர், பிளாஸ்டிக் போன்றவற்றால் ஏற்படும் நச்சுப் புகை காற்றை மாசுபடுத்துகிறது. இந்த நச்சு கலந்த காற்றைச் சுவாசிப்பதால் ஆஸ்துமா, நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன.

இன்று இந்த ஆண்டுக்கான போகியின் போது காற்று மாசு ஏற்படுத்துக் கூடிய பொருட்களை எரித்திருந்தாலும், வரும் ஆண்டுகளிலிருந்து இதை தவிர்த்துப் போகி பண்டிகையைக் கொண்டாடி, பழையனவற்றைக் கழித்து, தமிழர் திருநாளான பொங்கலை கொண்டாடுவோம் என்ற உறுதிமொழியை மகிழ்ச்சியுடன் ஏற்போம்.

Trending

Exit mobile version