வணிகம்

ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க முடியவில்லையா? மூட வேண்டியது தான்! விமான துறை அமைச்சர் அதிரடி!

Published

on

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விற்க முடியவில்லை என்றால், அதை மூட வேண்டியது தான் ஒரே வழி என்று, விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அரசுக்கு உள்ள நிதி நெருக்கடியில் கூடுதலாக ஏர் இந்தியாவுக்கு நிதி அளிப்பது என்பது நல்ல ஒரு முடிவல்ல.

ஏர் இந்தியாவில் பணிபுரியும் 13,629 ஊழியர்களின் பணி பாதுகாப்புக்கான கடமையை அரசு ஏற்கும் என்றும் ஹர்திப் சிங் பூரி கூறினார்.

ஏர் இந்தியாவில் நேரடியாக பணிபுரியும் ஊழியர்களுக்கு அரசு பாதுகாப்பு அளிக்கும், ஆனால் ஒப்பந்த முறையில் பணிபுரியும் நிலை என்ன? இந்த எண்ணிக்கை நேரடி ஊழியர்களை விட அதிகம். இதனால் லட்சம் கணக்கான ஊழியர்கள் பணியை இழப்பார்கள்.

தனியார் விமான போக்குவரத்து நிறுவனங்களும் நட்டத்தில் இயங்கி வரும் நிலையில், இந்த ஒப்பந்த பணியாளர்களின் நிலை கேள்விக்குறியாகவே உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version