இந்தியா

சூரரைப் போற்று எதிரொலி? ஏர் இந்தியாவில் இனி விமானக் கட்டணம்..?

Published

on

சூரரைப் போற்று திரைப்படத்தின் எதிரொலி போன்று, ஏர் இந்தியாவில் மூத்த குடிமக்களுக்கு விமானக் கட்டணம் 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக முடங்கியிருந்து விமான சேவைகள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக ஏர் இந்தியா நிறுவனம் அதிரடி சலுகையை அறிவித்துள்ளது.

அதன்படி, ஏர் இந்தியாவில் மூத்த குடிமக்களுக்கு விமானக் கட்டணம் 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு சில நிபந்தனைகளும் விதிமுறைகளும் விதிக்கப்பட்டுள்ளன. 3 நாட்களுக்கு முன்பு தான் இந்த டிக்கெட் புக் செய்ய முடியும். அதுவும் உள்நாட்டில் மட்டும் தான் பயணம் மேற்கொள்ள முடியும். பன்னாட்டு விமான சேவைகளுக்கு பொருந்தாது.

மூத்த குடிமக்கள் தங்களுக்கான அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும். ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, அல்லது ஏர் இந்தியா நிறுவனத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை என எதுவாகவும் இருக்கலாம்.

50 சதவீத கட்டண குறைப்பு என்பது அடிப்படை கட்டணத்திற்கான சலுகை மட்டுமே. மற்றபடி வரி தனியாக வசூலிக்கப்படும். அடையாள அட்டை இல்லாதவர்கள் விமான பயணத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் செலுத்திய கட்டணமும் திருப்பி தரப்படாது.

Trending

Exit mobile version