வணிகம்

ஜெட் ஏர்வேஸ் விமானங்களைக் குத்தகைக்குக் கேட்ட ஏர் இந்தியா!

Published

on

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு உள்ள நிதி சிக்கலைத் தீர்த்து, அதை விற்கும் பொறுப்பை எஸ்பிஐ ஏற்றுள்ளது.

ஜெட் ஏர்வேஸ் செயல்படாததால் அதன் விமானங்கள் பயன்படுத்தப்படாமல் தானே உள்ளது. அதை தங்களுக்குக் குத்தகைக்குக் கொடுங்கள் என்று ஏர் இந்தியா ஜெட் ஏர்வேஸிடம் கேட்டுள்ளது.

டெல்லி, மும்பை, லண்டன், துபாய், சிங்கப்பூர் ஆகிய வழித்தடங்களில் கூடுதலாக விமானங்களை இயக்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.

ஜெட் ஏர்வேஸ் சேவை முடங்கியதால்தான் ஏர் இந்தியா கூடுதலாக விமானச் சேவைகளை அளிக்க முன் வந்துள்ளது. இதற்குத் தேவையான கூடுதல் விமானங்களுக்கு ஜெட் ஏர்வேஸ்க்கு சொந்தமான போயிங் 777 விமானங்கள் வேண்டும் என்றும் ஏர் இந்தியா கேட்டுள்ளது.

ஜெட் ஏர்வேஸ்க்கு இடைக்கால நிதியாக 1,500 கோடி ரூபாய் அளிக்க முடிவு செய்துள்ள எஸ்பிஐ இந்த ஆஃபரை பயன்படுத்திக்கொள்ளுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version