இந்தியா

ஏர் இந்தியாவின் வித்தியாசமான அறிவிப்பு.. இதுவும் ஒருவகையில் பணிநீக்க நடவடிக்கையா?

Published

on

ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய அறிவிப்பு இதுவும் ஒரு வகையில் பணி நீக்க நடவடிக்கையாக இருக்கலாம் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்திய அரசுக்கு சொந்தமான நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கியது என்பதும் கடந்த ரு வருடத்தில் டாடா நிறுவனம் ஏர் இந்தியாவை லாபத்தை நோக்கி கொண்டு சென்று கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏர் இந்தியா நிறுவனத்திற்காக 400க்கும் மேற்பட்ட புதிய விமானங்களை வாங்க டாடா குழுமம் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்திட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் டாடா நிறுவனத்தில் ஏற்கனவே விருப்ப ஓய்வு அறிவிப்பு நடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது என்பதும் இதில் ஒரு சில சலுகைகளை பெற்று பலர் விருப்ப ஓய்வு பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக டாடா நிறுவனம் விருப்ப ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விமானத்தில் பறந்து செல்லும் பணியில் இருக்கும் பைலட்டுகள் மற்றும் ஊழியர்கள், ஏர் இந்தியா அலுவலகத்தில் வேலை பார்க்கும் எழுத்தர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு இந்த சலுகை அளிக்கப்படுவதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

மார்ச் 17 முதல் ஏப்ரல் 30 வரை விருப்ப ஓய்வுக்கு ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் இந்த காலத்தில் விண்ணப்பிக்கும் ஊழியர்களுக்கு ஒருமுறை கருணைத்தொகை வழங்கப்படும் என்றும் ஏர் இந்தியா அறிவித்துள்ளது. அதாவது மார்ச் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும் விருப்ப ஓய்வு பணியாளர்களுக்கு கருணைத்தொகை ஒரு லட்சத்துக்கு மேல் கிடைக்கும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தில் இருந்து சுமார் 2,100 ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற விண்ணப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. விமானத்தில் பறக்கும் ஊழியர்கள் மற்றும் பறக்காத ஊழியர்கள் என மொத்தம் ஏர் இந்தியாவில் 11 ஆயிரம் பணியாளர்கள் தற்போது பணிபுரிந்து கொண்டு நிலையில் 2100 பேர் விருப்ப ஓய்வில் செல்வார்கல் என்றே கருதப்படுகிறது. இருப்பினும் இது கட்டாய விருப்ப ஓய்வு இல்லை என்றும் ஊழியர்கள் தாங்களாகவே விருப்பப்பட்டு செல்ல மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version