இந்தியா

ரிஷிகேஷ் யாத்ரா செல்லும் பக்தர்களுக்கு உதவும் ட்ரோன்கள்: புதிய முயற்சி..!

Published

on

ரிஷிகேஷ் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு திடீரென உடல் நலவு குறைவு ஏற்பட்டால் அவர்களுக்கு தேவையான மருந்து பொருட்களை அனுப்ப ட்ரோன்கள் பயன்படுத்தும் வசதியை ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனை செய்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டும் ரிஷிகேஷ் யாத்திரை சென்ற பக்தர்கள் சுமார் 300 பேர் உயிரிழந்த உள்ளனர் என்றும் பெரும்பாலும் உடல் நல குறைவு காரணமாக உயிருள்ளதாக கூறப்படுகிறது. சரியான நேரத்தில் மருந்து பொருள்கள் கிடைக்காததால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்காக எய்ம்ஸ் ரிஷிகேஷ் மருந்து பொருட்களை அவசர காலத்திற்கு எடுத்துச் செல்ல ட்ரோன்களை பயன்படுத்தும் சேவையை தொடங்கியுள்ளது.

கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய நான்கு புனித தளங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பக்தர்கள் பயணம் செய்கின்றனர். பத்தாயிரம் அடிக்கு மேல் உள்ள இமயமலையில் இந்த பாதயாத்திரை நடைபெறுவதால் திடீரென பக்தர்களுக்கு மருத்துவ சேவை தேவைப்படுகிறது. ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தாலும் பல உயிர்கள் அவசர மருந்துகள் கிடைக்காததன் காரணமாக இழக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ட்ரோன்கள் மூலம் மருந்து பொருட்களை அவசர காலத்துக்கு எடுத்து செல்லும் சேவையை தொடங்கி வைத்தார். யாத்திரையின் போது திடீரென மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கு இந்த ட்ரோன்கள் மருந்துகளை கொண்டு செல்லும் என்றும் நாட்டிலேயே முதல்முறையாக மருந்து பொருட்களைக் கொண்டு செல்வதற்கு ட்ரோன்கள் பயன்படுத்தப்படும் சேவை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

36 கிலோ மீட்டர் தூரத்தை 30 நிமிடங்களில் இந்த ட்ரோன் கடந்து சென்று மருந்து பொருட்களை சரியாக டெலிவரி செய்தது என்றும் சோதனையின் போது தெரியவந்துள்ளது. இந்த ட்ரோன்கள் யாத்திரை செல்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் வயது காரணமாக உயரமான இடங்களில் சொல்லும் பக்தர்கள் திடீரென உடல்நிலை பிரச்சனையில் பாதிக்கப்பட்டால் குறிப்பாக இதயம் மற்றும் நுரையீரல் சம்பந்தமான நோய்களை பாதிக்கப்பட்டால் அல்லது சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கான மருந்து பொருட்கள் மட்டும் இன்றி ரத்தம் உள்பட சில பொருட்களையும் இந்த ட்ரோன்களில் எடுத்துச் சொல்லலாம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version