இந்தியா

பள்ளிகளை படிப்படியாக திறக்கலாம்: எய்ம்ஸ் இயக்குனர் பரிந்துரை

Published

on

பள்ளிகளை படிப்படியாக திறக்கலாம் என எய்ம்ஸ் இயக்குனர் பரிந்துரை செய்திருப்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது படிப்படியாக குறைந்து வருவதால் பள்ளிகளை திறக்க வேண்டுமென ஏற்கனவே ஆசிரியர்கள் சங்கம் மற்றும் தனியார் பள்ளி உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இருப்பினும் இப்போதைக்கு பள்ளிகள் திறக்கும் வாய்ப்பும் இல்லை என முதலமைச்சர் முக ஸ்டாலின் சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தியாவில் உள்ள ஒரு சில மாநிலங்களில் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளன. பள்ளிகள் திறக்கும் தேதிகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் நாடு முழுவதும் படிபடியாக பள்ளிகளைத் திறக்கலாம் என எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரந்திப் குலேரியா அவர்கள் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் பள்ளிகள் திறக்கும் முன் சரியான கண்காணிப்பு வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பள்ளி வகுப்புகளில் மாணவர்கள் நேரடியாக கல்வி கற்பது கல்வியாளர்கள் கண்ணொட்டத்தில் மிகவும் முக்கியமானது என்றும் ஒரு மாணவரின் தனிப்பட்ட குணத்தையும் பழக்க வழக்கத்தையும் ஆசிரியர் தீர்மானிக்க வேண்டும் என்றால் அது பள்ளி திறப்பதன் மூலம்தான் நடைபெறும் என்றும் எனவே பள்ளிகளை படிப்படியாக திறக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எய்ம்ஸ் இயக்குனரின் பரிந்துரையை ஏற்று மத்திய மாநில அரசுகள் விரைவில் பள்ளிகளை திறக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version