தமிழ்நாடு

எதிர்க்கட்சிகளின் வாக்கு சீட்டு தேர்தல் கோரிக்கைக்கு ஆதரவு அளித்த அதிமுக!

Published

on

2019-க்கான பொதுத் தேர்தல் குறித்த பரபரப்பு தற்போதே தொடங்கியுள்ள நிலையில் 17 அரசியல் கட்சிகள் இந்த முறை மின்னணு இயந்திரத்தினைத் தவிர்த்து வாக்கு சீட்டு முறையில் வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணத்திடம் கோரிக்கை வைத்து வரும் நிலையில் அதற்கு அதிமுகவும் ஆதரவு அளித்துள்ளது.

மக்களவையின் துணை சபாநாயகரான அதிமுகவின மூத்த தலைவரான தம்பிதுரை அதிமுக வாக்கு சீட்டு முறையில் தேர்தலை சந்திக்கத் தயார் எனத் தெரிவித்துள்ளார். பல மேற்கத்திய நாடுகளில் மின்னணு வாக்கு முறையினைத் தவிர்த்து இன்று வரை வாக்களிக்கப் பேப்பர் முறையைத் தான் பின்பற்றி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2017-ம் ஆண்டுத் தேர்தலில் பல இடங்களில் மின்னணு வாக்கு முறையில் மோசடி நடைபெற்றதாகச் சர்ச்சை எழுந்து வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் இந்தப் பேப்பர் வாக்கு சீட்டு முறையினைக் கோரிக்கையாக வைத்துள்ளனர். ஆனால் தேர்தல் ஆணையம் மின்னணு வாக்கு இயந்திரங்களில் எந்த மோசடியும் செய்ய முடியாது. வேண்டும் என்றால் வாக்காளர்களுக்குக் கூடுதலாக உறுதி அள்ளிக்கும் முறையினை அளிப்பதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்த போது எதிர்க்கட்சிகள் அதனை ஏற்கவில்லை.

திருநாமுல் காங்கிரன்ஸ், காங்கிரஸ், ஷிவ் ஷேனா, தெலுங்கு தேசம் கட்சி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் திங்கட்கிழமை பாரராளுமன்றத்தில் இது குறித்து அழுத்தம் அளிக்க உள்ளனர்.

தமிழ் நாட்டின் முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவும் 2001-ம் ஆண்டு மின்னணு வாக்கு ம் நுறையில் சந்தேகங்கள் உள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையும் தம்பிதுறை சுட்டி காட்டியுள்ளார்.

எனவே 2019-ம் ஆண்டின் பொதுத் தேர்தல் மின்னணு வாக்கு முறையில் நடுக்குமா என்பது சந்தேகம் தான் என்றும் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version