இந்தியா

ஆன்லைன் செமஸ்டர் தேர்வை புத்தகம் பார்த்து எழுதலாமா? அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் விளக்கம்

Published

on

ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகளை புத்தகத்தைப் பார்த்து எழுதலாம் என்பது குறித்து அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் விளக்கமளித்துள்ளது.

அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஆன்லைன் செமஸ்டர் தேர்வு சமயத்தில் புத்தகத்தைப் பார்த்து எழுதலாம் என்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதனால் மாணவர்கள் குஷியாகியுள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக நவம்பர்-டிசம்பர் மாதத்தில் நடைபெற வேண்டிய செமஸ்டர் தேர்வு வரும் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்வை புத்தகத்தைப் பார்த்து எழுதலாம் என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தெரிவித்துள்ளது

கல்லூரிகள் கடந்த ஒன்றரை ஆண்டு காலத்திற்கு மூடப்பட்டுள்ளன என்றும், இடையில் சில நாட்கள் திறக்கப்பட்டு இருந்தாலும் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன என்ற நிலையில் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் பொறியியல் தேர்வை புத்தகத்தைப் பார்த்து எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

மாணவர்களுக்கு அவர்களுடைய கற்றல் திறனை சோதிப்பதற்கு மட்டுமே தேர்வுகள் என்றும் எனவேதான் ஆன்லைனில் தேர்வு நடைபெற இருப்பதாகவும் இந்த தேர்வை புத்தகத்தைப் பார்த்து எழுதலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் ஆன்லைன் வழியாக கலை அறிவியல் தேர்வுகளும் தொழில்நுட்ப தேர்வுகள் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்வுகளை மாணவர்கள் புத்தகத்தை பார்த்துக் கொள்ளலாம் என்பது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது

மாணவர்கள் புத்தகத்தைப் பார்த்து எழுதலாம் என்ற இந்த அறிவிப்பு கல்வியாளர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தேர்வு என்பதே மாணவர்களின் ஞாபகத் திறனை சோதிப்பது தான் என்ற நிலையில் புத்தகத்தைப் பார்த்து எழுதலாம் என்று அனுமதிக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

seithichurul

Trending

Exit mobile version