தமிழ்நாடு

மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் குவியும் அதிமுக தொண்டர்கள்!!

Published

on

சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் இன்று திறக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் கட்டப்பட்ட இந்த நினைவிடத்தைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இதற்கான சிறப்பு நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அதிமுக எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பி-க்கள், கட்சியின் மூத்த மற்றும் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த நினைவிடம் சுமார் 80 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இதற்கான அறிவப்பு கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியானது.

ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு அருகிலேயே தான் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடமும் அமைந்துள்ளது. அதைப் போலவே முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோரது நினைவிடங்களும் அங்கே தான் அமைந்துள்ளன.

இன்று ஜெயலலிதா நினைவிடத் திறப்புக்கு பல மாவட்டங்களில் இருந்து அதிமுக தொண்டர்கள், சென்னைக்கு வருகை தந்தனர். அவர்கள் நினைவிடம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர், அருகில் இருக்கும் கருணாநிதியின் நினைவிடத்துக்கும் சென்று மரியாதை செலுத்தினார்கள்.

இது குறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version