தமிழ்நாடு

ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விண்ணப்ப மனுகேட்ட தொண்டர் அடித்து விரட்டியடிப்பு: அதிமுக அலுவலகத்தில் பரபரப்பு!

Published

on

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட விருப்பமனு கேட்டு வந்த அதிமுக தொண்டர் ஒருவர் அடித்து விரட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வம் அவர்கள் இருந்துவரும் நிலையில் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார். இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் சமீபத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடைபெறும் என்றும் அதற்கான விருப்ப மனு இன்று முதல் அதிமுக தலைமை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் வரும் 7ஆம் தேதி நடக்கும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிடுவதற்காக விருப்ப மனு கேட்டு ஓமப்பொடி பிரசாத்சிங் என்பவர் தலைமை அலுவலகத்திற்கு வந்து கேட்டார். இதனை அடுத்து அதிமுக தொண்டர்கள் அவரை விரட்டி அடித்தனர்.

இந்த நிலையில் அவர் வெளியே வந்து தனக்கு விருப்பமனு தர மறுப்பதாக செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்தார். அவ்வாறு அவர் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கும் போதே அவரை அதிமுக தொண்டர்கள் வெளியில் இழுத்துச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அப்படி என்றால் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் என்பது கண்துடைப்பா? என்ற கேள்வியை அதிமுக தொண்டர்கள் எழுப்பி வருகின்றனர்.

Trending

Exit mobile version