தமிழ்நாடு

செய்தியாளர்கள் சந்திப்பில் ஜாதி பேசிவிட்டு, சாரி கேட்ட அமைச்சர்!

Published

on

அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்ட ஜாதியின் பெயரை சுட்டிக்காட்டியதால் சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

மதுரை எய்மஸ் கட்டுமானப் பணிகள் தாமதமாவதற்கு காரணம் பேரம் நடந்து கொண்டிருப்பதாக திமுக ஸ்டாலின் சாடியிருந்தார். இந்த நிலையில், மதுரை அம்மா மினி கிளினிக் தொடக்க விழாவில் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் செல்லூர் ராஜூ, குறிப்பிட்ட சாதியின் பெயரைச் சொல்லி, அந்த ஜாதி என்றால், அந்த புத்தி தானே வரும் என்று பேசினார்.

அமைச்சரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்ப, உடனடியாக அடுத்த செய்தியாளர்கள் சந்திப்பிலேயே மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். மேலும், ஜாதி மதம் பார்ப்பவன் நானில்லை என்றும், தனக்கு ஜாதி சாயம் பூச வேண்டாம் என்றும் சமாளித்துக் கொண்டார்.

Trending

Exit mobile version