தமிழ்நாடு

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார்: அரசியல் பிரபலங்கள் இரங்கல்

Published

on

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்த நிலையில் சற்றுமுன் அவர் காலாமானார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அவர்கள் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக அவ்வப்போது சிகிச்சை எடுத்து வருகிறார். இந்த நிலையில் திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனை அடுத்து சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த சில வாரங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மதுசூதனனுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை நடைபெற்று வருவதாகவும் அவரது உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக இருப்பதாகவும் இருப்பினும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சற்றுமுன் மதுசூதனன் காலமானார்.

கடந்த 1991 முதல் 96 வரையிலான முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் மதுசூதனன் என்பதும் அதன் பின்னர் ஜெயலலிதாவால் அதிமுக அவைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தலைமையிலும் இவர் அவைத்தலைவராகவே நீடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version