தமிழ்நாடு

இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம்.. தேர்தல் குறித்து முக்கிய முடிவு!!

Published

on

அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது, நிர்வாகிகளை நிர்ணயிப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

சென்னை அருகிலுள்ள வானரகத்தில் இன்று காலை தொடங்கும் அதிமுக கூட்டம், மாலை வரையில் நடைபெறுகிறது. மாலை 4.30 மணியளவில் அதிமுக தலைமை அலுவலகத்தில் வைத்து ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் ஆலோசனைக் கூட்டமும் நடைபெறுகிறது. இதில் மண்டலப் பொறுப்பாளர்க், மாவட்டச்செயலாளர்கள், அமைச்சர்கள் பஙகேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டன. அந்த முடிவுகள் எந்த நிலைமையில் உள்ளது, சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்தப் பணிக் எவ்விதம் நடைபெறுகிறது உள்ளிட்ட பல்வேறு விவாதங்கள் நடைபெற உள்ளன.

குறிப்பாக தேர்தல் கூட்டணி, கூட்டணியில் இடம் பெறும் கட்சிகள், எந்த கட்சிக்கு எவ்வளவு தொகுதி போன்றவை குறித்து ஆலோசனை நடைபெற உள்ளதாக தெரிகிறது.

seithichurul

Trending

Exit mobile version