தமிழ்நாடு

அதிமுக முதல்வர் வேட்பாளராக பழனிசாமி.. பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

Published

on

சென்னையில் இன்று நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் வேட்பாளராக பழனிசாமி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை அடுத்துள்ள வானரகத்தில் இன்று அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தேர்தலை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்தக் கூட்டத்தில் முக்கியமான சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை,

  • அதிமுக முதல்வர் வேட்பாளராக பழனிச்சாமி அறிவிக்கப்பட்டதை ஒரு மனதாக ஏற்கப்படுகிறது.
  • ஓபிஎஸ்-இபிஎஸ்க்கு கூட்டணி கட்சிகளை முடிவு செய்யும் முழு அதிகாரம் வழங்குதல்
  • கொரோனாவுக்கு தடுப்பூசி இலவசம் என்ற முதல்வரின் அறிவிப்புக்கும், மத்திய அரசுக்கும் நன்றி தெரிவித்தல்
  • ஜெயலலிதா நினைவிடத்தை உலக புகழ் பெற்றதாக உருவாக்கும் அரசுக்கு நன்றி தெரிவித்தல்
  • தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு 20% அரசுப்பணியில் முன்னுரிமை வழங்கிய தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்தல்
  • நிவர், புரவி புயல்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம் அளித்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்தல்

Trending

Exit mobile version