தமிழ்நாடு

கடைசி நிமிடத்தில் அதிமுக வேட்பாளர் மனு வாபஸ்: திமுகவுக்கு ஆதரவா?

Published

on

திமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கடைசி நிமிடத்தில் அதிமுக வேட்பாளர் ஒருவர் மனுவை வாபஸ் பெற்றதால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திருத்தணி நகராட்சியில் அதிமுக வேட்பாளர் வாணிஸ்ரீ என்பவர் 18வது வார்டில் போட்டியிட்ட நிலையில் அவர் திடீரென கடைசி நிமிடத்தில் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார்.

அந்த தொகுதியில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் இருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் கடைசி நேரத்தில் அதிமுக வேட்பாளர் தனது மனுவை வாபஸ் பெற்றதால் திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதிமுக வேட்பாளர் கடைசி நேரத்தில் வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால் அதிமுகவினர் சாலை மறியல் செய்ததால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் விரைந்து வந்து சாலை மறியல் செய்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுக வேட்பாளரை மிரட்டி திமுகவினர் வாபஸ் பெற வைத்து விட்டதாக அதிமுகவினர் குற்றம்சாட்டி வரும் நிலையில் அதிமுக வேட்பாளர் வாணிஸ்ரீ இது குறித்து எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக வேட்பாளருக்கு ஆதரவாக அதிமுக வேட்பாளர் ஒருவர் திடீரென கடைசி நிமிடத்தில் வேட்பு மனுவை வாபஸ் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version