தமிழ்நாடு

நீட் குறித்து ஆலோசனை: பாஜகவை அடுத்து அதிமுகவும் புறக்கணிப்பு!

Published

on

நீட் விலக்கு மசோதாவை சமீபத்தில் கவர்னர் திருப்பி அனுப்பிய நிலையில் இது குறித்து ஆலோசனை செய்ய இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூடவுள்ளது.

இந்த கூட்டம் அனைத்துக் கட்சிக் கூட்டம் என்று கூறப்பட்டாலும் இந்த கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகளே கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த கூட்டத்தில் நேற்று வரை கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்த அதிமுக தற்போது திடீரென கலந்துகொள்ளவில்லை என அறிவித்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நீட் விலக்கு குறித்து ஆலோசனை செய்ய இன்று கூட உள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் தாங்கள் கலந்து கொள்ள போவதில்லை என தமிழக முதல்வருக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியிருந்தார்.

அந்த கடிதத்தில் நீட் தேர்வு என்பது சமூக நீதி என்பதை இன்னும் முதலமைச்சர் உணரவில்லை என்றும் தமிழ்நாடு அரசு எடுக்கும் நல்ல விஷயங்களுக்கு பாஜக ஒத்துழைப்பு கொடுக்கும் என்றும் ஆனால் கண்துடைப்பாக ஏமாற்றும் விஷயங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பாஜகவை அடுத்து அதிமுகவும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என அறிவித்துள்ளது. நீட் விலக்கு தொடர்பாக இன்று நடக்கும் சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகள் புறக்கணித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே இன்று நடைபெறும் கூட்டம் திமுக கூட்டணி கட்சிகளின் கூட்டமாகவே கருதப்படும்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version