தமிழ்நாடு

அதிமுக-பாஜக கூட்டணி: அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி!

Published

on

தமிழகத்தில் பாஜக, அதிமுக கூட்டணியில் தான் உள்ளது என அமித்ஷா கூறியிருந்தார். ஆனால் அவர் கூட்டணியை உறுதி செய்யவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்கும் விதமாக சேலத்தில் பேசியுள்ளார்.

EPS and Annamalai 1

சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அகில இந்திய தலைவர்கள் நன்றாக யோசனை செய்துவிட்டு கூட்டணி குறித்து முடிவெடுக்கிறார்கள். மாநில தலைவராக என்னுடைய கருத்தை அமித்ஷாவிடம் கூறியிருக்கிறேன். அவர் அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறது என்று கூறினாரே தவிர கூட்டணியை உறுதி செய்யவில்லை. தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் உள்ளது. தொகுதி பங்கீடு முடிந்தால் தான் கூட்டணி உறுதியாகி விட்டது என்று கூற முடியும் என்றார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, கூட்டணியை பொறுத்தவரை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தான் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறார்கள். மாநிலத்தில் இருக்கின்றவர்கள் அல்ல. மத்தியில் இருக்கிறவர்கள் கூட்டணி தொடரும் என்று சொல்லியிருக்கிறார்கள் என்றார்.

seithichurul

Trending

Exit mobile version