தமிழ்நாடு

அதிமுக-தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை: 23 தொகுதிகள் கேட்பதாக தகவல்!

Published

on

அதிமுக கூட்டணியில் பாமக மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்துவிட்ட நிலையில் தற்போது அடுத்த கட்டமாக தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்த அறிவிப்பு இன்று வெளிவரும் என தெரிகிறது. இந்த நிலையில் பாமகவுக்கு இணையாக தேமுதிகவும் தங்களுக்கு 23 தொகுதிகள் வேண்டும் என்று கேட்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஆனால் அதிமுக தரப்பில் இருந்து 10 முதல் 15 தொகுதிகள் மட்டுமே கொடுப்பதாக கூறப்பட்டு வருகிறது. அமைச்சர் தங்கமணி இல்லத்தில் நடைபெற்று வரும் இந்த பேச்சுவார்த்தை இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சற்றுமுன் வந்த தகவலின்படி தேமுதிக தங்களுக்கு 20 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா எம்பி சீட் வேண்டும் என கோரிக்கை வைத்து வருவதாகவும் இதற்கு அனேகமாக அதிமுக ஒப்புக்கொள்ளும் என்றும் கூறப்படுகிறது.

இன்று நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு பின்னர் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version