தமிழ்நாடு

கன்னியாகுமரியால் முடிவுக்கு வந்த இழுபறி: பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள்?

Published

on

அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில் சற்று முன் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதனை அடுத்து அதிமுக பாஜக இடையே தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தம் நாளை கையெழுத்தாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 24 முதல் 26 தொகுதிகள் வரை ஒதுக்கப்படும் என தகவல் வெளிவந்துள்ளது. அனேகமாக 25 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகளில் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியை பாஜகவுக்கு அதிமுக ஒதுக்கியுள்ளதை அடுத்தே இழுபறி முடிவுக்கு வந்துள்ளது என்று கூறப்படுகிறது. கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியின் இடைத்தேர்தலில் மீண்டும் பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அமமுகவை அதிமுகவுடன் இணைக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் பாஜக வாபஸ் பெற்றுவிட்டதாக கூறப்படுவதால் அதிமுக கூட்டணியில் அமமுக இல்லை என்பதும் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version