இந்தியா

சாட் ஜிபிடியால் வேலை இழப்பா? வேலைவாய்ப்பா? இளைஞர்களின் குழப்பத்திற்கு விளக்கம்..!

Published

on

செயற்கை நுண்ணறிவு என்று கூறப்படும் AI தொழில்நுட்பம் காரணமாக ஏராளமானோர் வேலை இழக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த துறையின் வளர்ச்சி காரணமாக பல இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் AI என்ற செயற்கை நுண்ணறிவு பயன்பாடு அதிகரித்து வருகிறது என்பதும் இளைஞர்கள் மத்தியில் இந்த தொழில்நுட்பம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

நாம் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் உடனுக்குடன் பதில் வருகிறது என்பதும் அனைத்து தேவைகளையும் இந்த தொழில்நுட்பம் பூர்த்தி செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த தொழில்நுட்பம் காரணமாக பலர் வேலை இழக்க வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பாக ஊடகத்துறையில் இருக்கும் செய்தி எழுத்தாளர்கள் வேலை இழக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி இன்னும் பல துறைகளில் மனிதர்கள் செய்யும் வேலையை இந்த தொழில்நுட்பம் செய்வதால் வேலையிலிருந்து நீக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த துறையில் உள்ள வல்லுநர்கள் இது குறித்து கூறியபோது AI தொழில்நுட்பம் காரணமாக வேலை வாய்ப்பு தான் அதிகம் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

AI தொழில்நுட்ப வல்லுநர்கள் அனைத்து துறைகளிலும் தேவைப்படுவார்கள் என்றும் கிட்டத்தட்ட 45 ஆயிரம் வேலை வாய்ப்பு புதிதாக உருவாகும் என்றும் தெரிவித்துள்ளனர். ஒரு பக்கம் வேலை வாய்ப்பு குறைந்தாலும் மறுபக்கம் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் எனவே எந்த ஒரு தொழில்நுட்பம் புதிதாக அறிமுகமானாலும் இந்த சிக்கல் இருப்பது நடைமுறை வழக்கம்தான் இன்றும் அதே போல் தான் இந்த AI தொழில்நுட்பமும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இளைஞர்கள் அந்தந்த நேரத்தில் ட்ரெண்டிங்காக இருக்கும் தொழில்நுட்பங்களை கற்று வைத்துக் கொண்டால் அவர்கள் தங்கள் வேலை இழப்பு குறித்து அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக AI தொழில்நுட்பத்தில் டேட்டா இன்ஜினியர்கள் ஆண்டுக்கு 14 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்றும் அதேபோல் ஆண்டுக்கு 45 லட்சம் வரை சம்பாதிக்கும் பணிகளும் இதில் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version