இந்தியா

கோவா கடற்கரையில் நிறுத்தப்பட்டிருக்கும் AI-இயங்கும் ரோபோக்கள்.. ஏன் தெரியுமா?

Published

on

மனிதர்களின் வேலைகளை எளிதாக்க பயன்படுத்தப்பட்ட ரோபோக்கள் தற்போது மனிதர்களின் உயிரை காப்பாற்றவும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் கோவா கடற்கரையில் பெரிய அலைகளால் இழுத்துச் செல்லப்படும் சுற்றுலா பயணிகளை காப்பாற்றவும் அவர்களை எச்சரிக்கை செய்யவும் தற்போது ரோபோட்க்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கோவா கடற்கரையில் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் ரோபோக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த ரோபோட்க்கள் மனிதர்களுக்கு கடல் அலையால் ஏற்படும் ஆபத்தை எச்சரிப்பதோடு அவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கோவா என்றாலெ கடற்கரையில் குளிப்பது தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். ஆனால் கடலில் குளிப்பது என்பது மிகவும் ஆபத்தான செயல் என்று எச்சரிக்கை விடப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடல் அலையால் ஆபத்தான நிலைக்கு சென்றுள்ளதாகவும் அவர்களில் பலரை மீட்பு படையினர் மீட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் கடல் அலைகளால் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்படும் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கோவா அரசு தற்போது சுற்றுலா பயணிகளை எச்சரிக்கை செய்யவும் ஆபத்தில் கடல் நீரில் மூழ்கும் சுற்றுலா பயணிகளை காப்பாற்றும் வகையிலும் ரோபோட்களை அமைத்துள்ளதாக கூறியுள்ளது.

AI அடிப்படையில் இயங்கும் Aurus மற்றும் Triton ஆகிய ரோபோட்டுகள் மிகவும் துல்லியமாக ரோந்து செல்வதாகவும் அதிக அலைகள் இருக்கும் பகுதியை கண்டுபிடித்து அங்கு சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கை செய்வதன் மூலம் அவர்களின் உயிர் காக்க உதவுவதாகவும் கூறப்படுகிறது. ரோபோக்கள் மூலம் இந்த கண்காணிப்பு பணியை செய்வது மிகவும் எளிதாக இருக்கிறது என்றும் சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்து குறித்து எச்சரிக்கை மட்டுமின்றி விபத்து ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள காவலர்களுக்கு தகவல் அனுப்பும் பணியையும் ரோபோட்கள் செய்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கோவாவில் உள்ள மிராமர் கடற்கரையில், தெற்கு கோவாவில் உள்ள பைனா, வெல்சாவோ, பெனாலிம், கல்கிபாக் மற்றும் வடக்கு கோவாவில் உள்ள மோர்ஜிம் ஆகிய இடங்களில் இந்த ரோபோட்கலை காணலாம் என்று ஏஜென்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த ஆண்டுக்குள் சுமார் 100 ரோபோட்டுகள் கோவா கடற்கரை முழுவதும் பயன்படுத்தப்படும் என்றும் கோவா கடற்கரையில் இனி ஒரு உயிர் கூட பலியாகாத வகையில் இந்த ரோபோட்டுகள் மனித உயிர்களை காக்கும் என்றும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version